"பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை, குப்பை தொட்டி தான் கேட்கிறோம்", குமுறும் 27-வது வார்டு குடியிருப்புவாசிகள்

கோவை : 27-வது வார்டுக்கு உட்பட்ட முருகன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக குடியிருப்புவாசிகள் புகாரளிக்கின்றனர்.


கோவை : 27-வது வார்டுக்கு உட்பட்ட முருகன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக குடியிருப்புவாசிகள் புகாரளிக்கின்றனர்.



சுமார் 10 சென்ட் அளவிலான பொது இடத்தை ஒட்டியுள்ள பிரதான சாலை, சத்தியமங்கலம் சாலையையும், சின்னவேடம்பட்டி சாலையையும் இணைக்கின்றது. இதனால், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சாலையின் இரு பக்கத்திலும், அழுகிய கோழி இறைச்சிகளும், குப்பைகளும் கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்திக் கொண்டு சாலையை கடந்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு, வீட்டிலிருந்து கொண்டுவந்த குப்பை மூட்டையை சாலையில் தூக்கி எரிந்தவரிடம் கேட்டபோது, "முருகன் நகரை ஒட்டியுள்ள சக்தி நகரில் வசித்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து குப்பைக் கழிவுகளை பெற்று செல்கின்றனர். பெறப்படும் குப்பையை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டி இல்லாததால், பொது இடத்தையும், சாலையின் ஓரத்தையும் 'குப்பை பாயின்ட்'டாக அறிவித்து மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை இங்கு கொட்டி செல்கின்றனர். 



பின்னர். வாரம் இருமுறை லாரிகளில் வந்து குப்பையை எடுத்து செல்கின்றனர். என் வீட்டில் தினமும் குப்பை சேருகிறது, அதை வீட்டிற்குள் சேமிக்க முடியாது. கொட்டுவதற்கு குப்பைத் தொட்டியும் இல்லை. அதனால், குப்பை மேட்டில் கொட்ட வேண்டிய சூழல் உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளிலும் குப்பைத் தொட்டி இல்லை. அதனால், அவர்களும் இங்கு வந்து கொட்டிச் செல்கின்றனர்," என்றார்.

இவரைப் போலவே, முருகன் நகர், ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் சக்தி நகரில் வசிக்கும் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும், இந்த பொது இடத்தில் தான் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.



இதுபற்றி முருகன் நகர் குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், "கடந்த 5 வருடமாக இங்கு வசித்து வருகிறேன். இங்கு சுமார் 100 குடியிருப்புகளும், 5-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ளன. முருகன் நகருக்குள் நுழையும் சாலை முழுக்க குப்பை, இறைச்சிக் கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நிறைந்து கிடக்கிறது. சாலையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது. இரண்டு குப்பைத் தொட்டிகளை வைக்குமாறு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 



இதுபோக, குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்ள தொழிற்சாலைகளில் மிகமோசமான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும் அமில நாற்றம் வருகிறது. அவர்கள் எந்த விதிமுறைகளையும் மதிப்பதில்லை. சாலையில் உள்ள தெருவிளக்குகள் பராமரிப்பின்றி உள்ளன. குடியிருப்புவாசிகள் மாலை நேரம் வீட்டிலிருந்து வெளியே வர முடிவதில்லை. ஆசைப்பட்டு கட்டிய கனவு வீடு என்பதால் இங்கிருந்து செல்ல மனம் வரவில்லை," என்று வேதனையை வெளிப்படுத்தினார்.



நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்று நகரின் ஓரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பைத் தொட்டிகளே வைக்கப்படுவதில்லை, குப்பை மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படுவதில்லை.

ஆர்.எஸ்.புரம் மற்றும் ரேஸ் கோர்ஸ் போன்ற பகுதிகளுக்கு காட்டும் அதே அக்கறையை, மாநகராட்சி அதிகாரிகள் இங்கும் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...